என்செலடஸ் சனிக் கோளின் ஆறாவது பெரிய துணைக்கோள் ஆகும்.
சமீபத்தில், அறிவியலாளர் குழு ஒன்று சனிக் கோளின் துணைக் கோளான என்செலடஸின் மேற்பரப்பு கடலில் பாஸ்பரஸ் கரைந்துள்ளதைக் கண்டுபிடித்தது.
இது விண்வெளியில் வெளிப்படுகின்ற ஒரு பனி மூடிய நீர் கடலான என்செலடஸ் பெருங்கடலின் ஒரு முக்கியக் கட்டுமானத் தொகுதிக்கான புதிய ஆதாரங்களை வழங்குகிறது.
காசினி விண்கலம் மேற்கொண்ட கண்காணிப்புகளின் படி, இது நிலப்பரப்பு சார்ந்த வாழ்வியலின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொகுதியை உருவாக்குகிறது.
பாஸ்பரஸ் என்பது உயிரினங்களை உருவாக்கும் டிஎன்ஏ, உயிரி இழைகள் மற்றும் எலும்புகளுக்கு இன்றியமையாத ஒரு உறுப்பு ஆகும்.
பாஸ்பரஸ் தண்ணீரில் கரைந்திருந்தால் மட்டுமே உயிரினங்களால் அதனைப் பயன்படுத்த முடியும்.
என்செலடஸில் உள்ள நீரைப் பூமியில் உள்ள நீருடன் ஒப்பிடும் போது அதிக காரத் தன்மை உடையது மற்றும் ஆக்ஸிஜன் இல்லாததாகும்.