என்விஸ்டாட்ஸ் இந்தியா 2024: சுற்றுச்சூழல் மதிப்பீடுகள்
October 12 , 2024 72 days 127 0
புள்ளியியல் அமைச்சகம் (MoSPI) ஆனது 7வது தொடர் “EnviStats India 2024: Environment Accounts” அறிக்கையினைத் தொகுத்து வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சூரிய சக்தியின் நிறுவப்பட்ட திறன் ஆனது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2.82 ஜிகா வாட்டிலிருந்து 25 மடங்குக்கு மேல் அதிகரித்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 73.32 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது.
உலகின் ஆவணப்படுத்தப்பட்ட உயிரினங்களில் சுமார் 8% கொண்ட உலகின் 17 அதிக பன்முகத் தன்மை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 36 பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் 4 இடங்களை இந்தியா கொண்டுள்ளது.
2000 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் மொத்தப் பாதுகாக்கப் பட்ட பகுதிகளின் எண்ணிக்கையில் சுமார் 72 சதவீதமும் மற்றும் பரப்பளவில் 16 சதவீதமும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடல் சார் சுற்றுச்சூழலின் முக்கியமான துணைச் சுற்றுச்சூழல் அமைப்பான சதுப்பு நிலங்களின் பரவல் 2013 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் சுமார் 8% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான IUCN செந்நிறப் பட்டியலில் இடம் பெற்ற இனங்கள் ஆனது ‘தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்’ என்ற வகையின் கீழ் உள்ளன.