TNPSC Thervupettagam

எபோலா நோய்த் தொற்று

June 3 , 2020 1545 days 602 0
  • காங்கோ மக்களாட்சிக் குடியரசானது அந்நாட்டில் உள்ள மேற்கு நகரான  மபன்டாகாவில் ஒரு புதிய எபோலா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது.
  • 1976 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் எபோலா நோய்த்  தொற்று முதன்முறையாகக் கண்டறியப் பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் ஏற்பட்ட 11வது எபோலா நோய்ப் பாதிப்பு இதுவாகும்.
  • இந்த வைரசானது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி, அதன் பின்னர் மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்குப் பரவுவதன் மூலம் மனிதர்களிடையே வேகமாக பரவுகின்றது.
  • “rvsv - ZEBOV” என்று அழைக்கப்பட்ட ஒரு சோதனை முறையிலான எபோலா நோய்த் தடுப்பு மருந்தானது 2015 ஆம் ஆண்டில் கினியாவில் நடத்தப்பட்ட ஒரு மிகப்பெரியச் சோதனையின் போது எபோலா வைரசிற்கு எதிராக ஒரு உயரியப் பாதுகாப்பினை அந்த மருந்து அளிப்பது உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்