TNPSC Thervupettagam

எபோலா வைரசின் புதிய திரிபு

July 29 , 2018 2310 days 750 0
  • US Aid -னால் நிதி வழங்கப்படும் அமெரிக்க - மேற்கு ஆப்பிரிக்க ஆய்வில், சிய்ரா லியோனின் வடக்கு பொம்பலி பகுதியில் வௌவால்களில் எபோலா வைரசின் புதிய திரிபினை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது எந்த மாவட்டத்தில் கண்டறியப்பட்டதோ அதன் பெயரிலேயே பொம்பலி வைரஸ் திரிபு என்று பெயரிடப்பட்டுள்ளது. பொம்பலி வைரஸ் எபோலா வைரஸின் 6வது கண்டறியப்பட்ட வைரஸ் திரிபாகும்.
  • மற்றவை சைய்ரே, சூடான், தாய் வனம், பன்டிபுக்யோ மற்றும் ரெஸ்டான் ஆகியன ஆகும்.
  • எபோலா வைரஸ் என்பது அவ்வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் மனிதர்கள் அல்லாத உயர் பாலூட்டிகள், வௌவால்கள் மற்றும் வன மறிமான் ஆகியவை உள்ளிட்ட விலங்குகளுடனான உயிரிய நீர்மங்களின் தொடர்புகளின் மூலம் பரவும் மிகவும் ஆபத்தான குருதிக் காய்ச்சல் ஆகும்.
  • எபோலாவின் சைய்ரே திரிபு இருப்பதிலேயே அதிக ஆபத்தான ஒன்றாகும்.
  • மேற்கு ஆப்பிரிக்காவில் 2014-2016ல் ஏற்பட்ட எபோலா தாக்கம் (பரவல்) சைய்ரே வைரஸினால் ஏற்பட்டதாகும். இது முன்பு 1976-ல் சைய்ரே என்றறியப்பட்ட காங்கோ ஜனநாயக குடியரசில் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்