TNPSC Thervupettagam

எபோலா வைரஸ் பெருந்தொற்றிற்கு முற்றுப்புள்ளி

January 17 , 2023 552 days 242 0
  • சூடான் எபோலா வைரசினால் ஏற்பட்ட எபோலா பெருந்தொற்றானது உகாண்டாவில் முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று மத்திய முபெண்டே மாவட்டத்தில் இந்த நோயின் முதல் பாதிப்பானது உறுதி செய்யப்பட்டது.
  • இது ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட உகாண்டாவின் முதல் சூடான் எபோலா வைரஸ் பெருந் தொற்றாகும் என்பதோடு, இது ஒட்டு மொத்தமாக உகாண்டாவில் ஏற்பட்ட ஐந்தாவது பெருந்தொற்றாகும்.
  • எபோலா வைரஸ் நோய் என்பது எபோலா வைரஸ் திரிபுகளுள் ஒன்றினால் ஏற்படும் தொற்று காரணமாக ஏற்படுகின்ற அரிதான மற்றும் கொடிய நோயாகும்.
  • இந்த வைரஸ் ஆனது முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் எபோலா நதிக்கு அருகில் கண்டறியப் பட்டது.
  • உகாண்டாவில் ஏற்பட்டுள்ள இந்தப் தொற்றுப் பெருவெடிப்பானது, சூடான் எபோலா வைரசினால் ஏற்பட்டதாகும்.
  • எபோலா வைரஸின் ஆறு வகைகளில் இதுவும் ஒன்றாகும் என்பதோடு, இதனைத் தடுப்பதற்காக வெற்றிகரமான தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்