TNPSC Thervupettagam

எம் -சான்ட் எனப்படும் செயற்கை மணல்

August 22 , 2019 1794 days 843 0
  • மாற்றுக் கட்டுமானப் பொருளாக எம் - சான்ட் எனப்படும் செயற்கை மணலின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் தரமற்ற பொருட்களை ஒழிப்பதற்காகவும் எம்-சான்ட் கொள்கையை முன்வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
  • எம் - சான்ட் (தயாரிக்கப்பட்ட மணல்) என்பது கான்கீரிட் கட்டுமானத்திற்கு நதி மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் மணலாகும்.
  • இது கடினமான கருங்கற்களை உடைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றது.

நன்மைகள்

  • இது சிமெண்ட்டின் இறுகு நேரம் மற்றும் அதன் பண்புகளை பாதிக்கக்கூடிய எந்தவொரு கரிம மற்றும் கரையக்கூடிய சேர்மத்தையும் கொண்டிருக்கவில்லை.
  • இந்த எம்-சான்ட் மணலை கருங்கல் ஆலைகளுக்கு அருகிலேயேத்  தயாரிக்க முடிவதனால் இது குறைந்த போக்குவரத்து செலவு கொண்டது.
  • மாசுப் பொருட்கள் இல்லாத காரணத்தினால் கான்கிரீட்டின் தரம் மற்றும் ஆயுள் அதிகரித்துள்ளது.
  • இது பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்