3.5 ஆண்டு காலத்திற்கு எய்ட்ஸ் மருந்துகளைத் தயாரிப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள லாரஸ் லேப்ஸ் என்ற மருந்து நிறுவனமானது உலக நிதி என்ற அமைப்புடன் ஒரு உத்திசார் பங்காளர் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
உலக நிதி என்பது அரசாங்கங்கள், குடிமக்கள், சமூக நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் உலக அறக்கட்டளை நிறுவனம் ஆகியவற்றிற்கிடையேயான ஒரு பங்காளர் நிறுவனமாகும்.
உலக நிதியானது 2002 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இது எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகிய தொற்று நோய்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கென்று வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வருடத்திற்கு சுமார் 4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது.