தமிழக அரசானது தமிழ்நாடு மாநிலத்திற்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, எய்ம்ஸ் (All India Institute of Medical Sciences-AIIMS) மருத்துவமனையானது மதுரைக்கு அருகே அமைய உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கான எய்ம்ஸ் மருத்துவமனையானது 2015-ஆம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பான காரணங்களால் இத்திட்டம் சில தாமதங்களைச் சந்தித்தது.