எரிசக்தி ஆற்றல் மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு புது தில்லியில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டின் முடிவில் ஒரு சேர எரிசக்தி துறை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு,
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மின்சார வசதி இல்லாத கிராமங்களிலும் டிசம்பர் 2017க்குள் மின்சார வசதியளிக்க வேண்டும்.
மின்சார வசதி பெற விருப்பம் தெரிவிக்கும் அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர் 2018க்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும்.
சூரிய மின் சக்தி மேற்கூரைகளை அமைக்க ஊக்கப்படுத்துதல், மற்றும் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை ஒழுங்கான முறையில் மின்சார விநியோக கட்டமைப்போடு இணைத்தல்.
டீசலில் இயங்கும் மோட்டார் பம்புகளுக்கு பதிலாக சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் பம்புகளை பயன்படுத்துதல்.
குசும் (Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan -KUSUM)) திட்டத்தை செயல்படுத்தி 10,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையங்களை பரவலாக அமைப்பது மற்றும் உற்பத்தி செய்யப்படும். மின்சாரத்தை விநியோக கட்டமைப்புடன் இணைப்பது.
Bureau of Energy Efficiency (BEE) அமைப்பு வழங்கும் நட்சத்திர செயல்திறன் வாய்ந்த மோட்டார் பம்புகளை விவசாயத் துறையில் பயன்படுத்துதல்.
நாட்டில் ஒரு நகரமேனும் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலில் இயங்க வழி செய்ய வேண்டும்.