TNPSC Thervupettagam

எரிசக்தி சாசன ஒப்பந்தத்தில் இருந்து விலகல்

April 3 , 2024 107 days 232 0
  • எரிசக்தி சாசன ஒப்பந்தத்தில் (ECT) இருந்து விலகுவதாக ஐக்கியப் பேரரசு (UK) நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • ECT என்பது எரிசக்தித் துறையில் சர்வதேச முதலீட்டை மேம்படுத்த முயல்கின்ற ஒரு பலதரப்பு ஒப்பந்தமாகும்.
  • எரிசக்தித் துறையில் தனது விதிமுறைகளை மீறும் மாகாண அரசின் பல்வேறு நடவடிக்கைகளிலிருந்து பல முதலீட்டாளர்களின் முதலீடுகள் மீதான பாதுகாப்பை வழங்குகிறது.
  • 50க்கும் மேற்பட்ட மாகாணங்கள் இந்த ECT ஒப்பந்தத்தின் ஒப்பந்த உறுப்பினர்களாக உள்ளன.
  • சமீபத்திய ஆண்டுகளில் ECT ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்த 11வது ஒப்பந்த உறுப்பினராக ஐக்கியப் பேரரசு மாறியுள்ளது.
  • ECT ஒப்பந்தத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் இந்த அறிவிப்பானது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்