எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் முன்னணித்துவ திட்டத்தின் நிகர சுழிய உமிழ்வுச் சான்றிதழ்கள்
June 20 , 2023 528 days 250 0
எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் முன்னணித்துவத் திட்டத்தின் (LEED) நிகர சுழிய உமிழ்வு கொண்ட பசுமைக் கட்டிடத் திட்டங்களுடன் இந்தியா ஒரு சிறந்த நாடாக உருவெடுத்துள்ளது.
150 LEED நிகர சுழிய உமிழ்வு சான்றளிக்கப்பட்ட திட்டங்களில், இந்தியாவில் 45% அல்லது 73 திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகியன சான்றிதழ் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளன.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முறையே 47 (30%) மற்றும் 15 (10%) அளவுச் சான்றிதழ்களுடன் அதிக LEED நிகர சுழிய உமிழ்வுச் சான்றிதழ்களைக் கொண்டுள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது நாடுகளாக உள்ளன.
LEED நிகர சுழிய உமிழ்வு என்ற சான்றிதழானது கார்பன், ஆற்றல், நீர் அல்லது கழிவு ஆகிய பிரிவுகளில் நிகர சுழியம் அல்லது நிகர நேர்மறை நிலையை அடைந்தப் பல திட்டங்களுக்கு அங்கீகாரமளிக்கிறது.
LEED நிகர சுழிய உமிழ்வுத் திட்டங்களில் அலுவலக இடங்கள், தங்குமிட வசதிகள், சில்லறை வணிக வளாகங்கள், தொழில்துறை உற்பத்தித் திட்டங்கள் மற்றும் தரவு மையங்கள் ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் வெளியாகும் உமிழ்வுகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு கார்பன் உமிழ்வானது கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறையில் இருந்து வெளியிடப் படுகிறது.