TNPSC Thervupettagam

எரித்ரியாவிற்கு எதிரான UNSC தடைகள் விலக்கம்

November 20 , 2018 2102 days 578 0
  • எரித்ரியா மீது சுமத்தப்பட்ட தடைகளை விலக்கிக் கொள்வதற்கு ஒன்பது வருடங்களுக்குப் பிறகு 2018 நவம்பர் 14 அன்று ஐ.நா. பாதுகாப்பு குழு (UNSC – United Nations Security COuncil) ஒருமனதாக வாக்களித்துள்ளது.
  • பாதுகாப்பு குழுவானது எரித்ரியா மீது ஆயுதத் தடை, சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை ஆகியவற்றை விதித்திருந்தது.
பின்னணி
  • ஆயுதமேந்திய தீவிரவாத குழுவினருக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் 2009-ல் ஐ.நா. சபை சோமாலியாவின் அல்-ஷபாப் உட்பட முதன்முதலில் எரித்ரியா மீது கட்டுப்பாடுகளை விதித்தது.
  • பிரிட்டனால் கொண்டு வரப்பட்டு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இந்த தீர்மானம் ஆதரிக்கப்பட்டாலும் எரித்ரியா எப்போதும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தே வந்தது.
  • எரித்ரியா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கிடையேயான உறவுகளில் பல ஆண்டுகள் மோதல்களுக்குப் பிறகு சற்று சுமூக நிலையை அந்நாடு எட்டியுள்ள நிலையில் இந்த ஐ.நா. வாக்கொடுப்பு நடைபெற்றது.
  • இரண்டு தசாப்த காலமாக உள்ள பகைமைகளை அடுத்து ஜூன் 2018-ல் எரித்ரியா, எத்தியோப்பியாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டது.
  • மேலும் சமீபத்தில் எரித்ரியாவின் தலைவரும் சோமாலியாவின் ஐ.நா. ஆதரவு பெற்ற அரசாங்கமும் கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • 1990-களின் முற்பகுதிகளில் எத்தியோப்பியாவிடமிருந்து எரித்ரியா சுதந்திரம் பெற்றது. மேலும் அதே தசாப்தத்தின் பிற்பகுதியில் எல்லைப் பிரச்சினை காரணமாக போர் உருவானது.
  • எரித்ரியாவானது மேற்கில் சூடான், தெற்கில் எத்தியோப்பியா மற்றும் தென் கிழக்கில் டிஜிபுட்டி ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட ஆப்பிரிக்க நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்