ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னாவிலிருந்து வெளிவரும் புகை காற்றில் புகை சூழ் வளையங்களை உருவாக்குகிறது.
இந்த வளையங்கள் ஆனது எரிமலை சுழல் வளையங்கள் என்று அறிவியலாளர்களால் குறிப்பிடப்படும் ஓர் அரிய நிகழ்வு ஆகும்.
வாயு என்பது, முக்கியமாக நீராவியானது, பள்ளத்தில் உள்ள ஒரு துவாரம் வழியாக வேகமாக வெளியேறும் போது சுழல் வளையங்கள் உருவாகின்றன.
எட்னாவின் பள்ளத்தில் உருவான துவாரம் கிட்டத்தட்ட முழு வட்டமானதாகும்.
இந்த நிகழ்வு ஆனது முதன்முதலில் இத்தாலியில் உள்ள எட்னா மற்றும் வெசுவியஸ் ஆகியவற்றில் 1724 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது என்பதோடு அது 1755 ஆம் ஆண்டு முதல் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
எட்னா எரிமலையின் வெடிப்பு நிகழ்வுகள் ஆனது 500,000 ஆண்டுகளுக்கு முன்னதில் இருந்தே ஏற்படத் தொடங்கியது என்ற நிலையில் குறைந்தது 2,700 ஆண்டுகள் இந்த நடவடிக்கை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.