கடுமையான அரசாங்க வழிகாட்டுதலின் கீழ் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, அசாமில் மக் பிஹு என்ற திருவிழாவின் போது பாரம்பரிய எருமைச் சண்டை ஏற்பாடு செய்யப் பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் அம்மாநில அரசால் இந்தச் சண்டை தடை செய்யப்பட்டது.
எருமைச் சண்டை, யானை மற்றும் குருவிச் சண்டை ஆகியவை அஹோம் மன்னர் ருத்ர சிங்கா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போதிருந்து, எருமைச் சண்டை அசாமியச் சமூகத்தின் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது.