எறிகணை எதிர்ப்பு அமைப்பு - டார்க் ஈகிள்
December 18 , 2024
4 days
46
- அமெரிக்க நாடானது, டார்க் ஈகிள் என்ற ஒரு புதிய எறிகணை எதிர்ப்பு அமைப்பினை உருவாக்கியுள்ளது.
- இது எதிரி நாடுகளின் எறிகணைகளை நடுவானிலேயே இடைமறித்து தாக்கும் திறன் கொண்டது.
- இது நடுத்தர தூர வரம்புடைய எறிகணைகளைக் கொண்டுள்ளதோடு, மணிக்கு 20,826 கிலோ மீட்டர் வேகத்தில் கணைகளை ஏவக் கூடிய வேகத் திறன் கொண்டது.
- ரஷ்யாவின் S-300V4, S-400 மற்றும் S-500 அமைப்புகளை விட இந்த அமைப்பு பல மடங்கு அதிக செயல்திறன் கொண்டது என்று அமெரிக்கா கூறுகிறது.
- இது 50 கிலோமீட்டர் உயரத்தில் வினாடிக்கு 3000-3700 மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.
- ரஷ்யாவிடம் அமெரிக்காவின் டார்க் ஈகிளுடன் ஒப்பிடக் கூடிய வகையிலான 53T6M எறிகணை எதிர்ப்பு அமைப்பு உள்ளது.
Post Views:
46