கொரோனா வைரஸின் பாதிப்பிற்கு எறும்புத் திண்ணி காரணம் என்று சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்களைப் பொறுத்த வரை, சீனாவில் சுமார் 636 மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் பாதிப்பானது வுஹான் நகரில் உள்ள ஒரு சந்தையிலிருந்த எறும்புத் திண்ணிகள் மூலமாக ஏற்பட்டது.
எறும்புத் திண்ணியிலிருந்து பிரிக்கப்பட்ட கொரோனா வைரஸின் மரபணுத் தொகுப்பானது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட வைரஸ் தொகுப்புகளை 99% ஒத்திருக்கின்றது.
எறும்புத் திண்ணி
சீனாவில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் எறும்புத் திண்ணி பயன்படுத்தப் படுகின்றது.
புவியில் வாழும் செதில்களைக் கொண்ட ஒரே பாலூட்டி இதுவாகும்.
ஆசியாவில் அதிக அளவில் கடத்தப்பட்ட பாலூட்டி இனம் இதுவாகும்.
இந்த வைரஸானது எறும்புத் திண்ணி வர்த்தகத்தின் மூலம் சீனாவிற்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப் படுகின்றது.
சீன எறும்புத் திண்ணியானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்புப் பட்டியலில் (International Union for Conservation of Nature - IUCN) “மிகவும் அச்சுறு நிலையில் உள்ள இனமாகப்” பட்டியலிடப் பட்டுள்ளது.
IUCNன் சிவப்புப் பட்டியலில் இந்திய எறும்புத் திண்ணியானது (மனிஸ் கிராசிகுடாட்டா) “அருகி வரும் இனமாக” வகைப்படுத்தப் பட்டுள்ளது.