TNPSC Thervupettagam

எறும்புத் தின்னி கடத்தல் மோசடிக்கான சிறப்புப் பணிக் குழு

July 25 , 2018 2186 days 690 0
  • ‘அருகிவரும் உயிரினமான’ எறும்புத் தின்னி கடத்தல் மோசடியைத் தடுக்க ஒடிசா சிறப்புப் பணிக் குழு சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. பெரும்பாலான சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுவதில் பாலூட்டியான எறும்புத் தின்னியும் ஒன்று.
  • இந்த கிரகத்தில் செதில்களை உடைய பாலூட்டி எறும்புத் தின்னி மட்டுமே.
  • உலகம் முழுவதும் 8 வகை இனங்களைக் கொண்டுள்ளது எறும்புத் தின்னி. இந்தியாவில் இரண்டு வகை இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன.
  • அவையாவன
    • பெரும்பாலும் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் சீனாவின் எறும்புத் தின்னி (மணிஸ் பெண்டடாசிட்யாலா)
    • இந்திய எறும்புத் தின்னி (மணிஸ் கிரஸிகவ்டேட்டா)
  • ஐக்கிய நாடுகளுடன் இணைக்கப்பட்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியல் படி ‘உயர் அச்சுறுத்தல்’ நிலையில் உள்ள பாலூட்டியாக ‘சீனாவின் எறும்புத் தின்னி’ பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்திய எறும்புத் தின்னி ‘அருகி வரும்’ உயிரினமாக IUCN-ன் சிவப்புப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் படி அட்டவணை 1ல் வகைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் விலங்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்