TNPSC Thervupettagam

எலாலைட் மற்றும் எல்கின்ஸ்டன்டோனைட்

December 12 , 2022 717 days 414 0
  • சோமாலியாவில் விழுந்த ஒரு விண்கல்லில் இரண்டு புதிய கனிமங்கள் இருப்பதை கனடா நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • விண்கல் மோதிய நகரத்தின் பெயரால் இந்தக் கனிமத்திற்கு "எலாலைட்" என்றும், விண்கோள்கள் அறிவியல் துறையின் அறிவியலாளர் லிண்டி எல்கின்ஸ்-டாண்டன் என்பவரின் நினைவாக "எல்கின்ஸ்டன்டோனைட்" என்றும் பெயரிடப்பட்டுள்ளன.
  • இதே போன்ற கனிமங்கள் 1980 ஆம் ஆண்டுகளில் ஓர் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப் பட்டன என்றாலும், இவை இயற்கையாகத் தோன்றியதாக பதிவு செய்யப் படவில்லை.
  • 2020 ஆம் ஆண்டில் சோமாலியாவில் கண்டெடுக்கப்பட்ட 2 மீட்டருக்கும் அதிகமான அகலமும், 15 டன் எடையும் கொண்ட விண்கல் ஆனது இது வரை பதிவு செய்யப்பட்ட ஒன்பதாவது பெரிய விண்கல் ஆகும்.
  • செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள குறுங்கோள் பட்டையில் உள்ள சிறு கோள் ஒன்றில் இருந்து இந்த விண்கல் பிரிந்து வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்