சமீபத்தில் அசாமில் உள்ள டிமா ஹசாவோ மாவட்டத்தில், நீர் சூழ்ந்த எலி வளை நிலக்கரி சுரங்கத்தில் (கை முறை துளையிடுதல்) சில தொழிலாளர்கள் சிக்கி உயிர் இழந்தனர்.
இது வடகிழக்கின் சில பகுதிகளில் பரவலாக உள்ள ஓர் அறிவியல் பூர்வமற்ற மற்றும் சட்டவிரோத சுரங்க முறையாகும்.
ஒரு நபர் மட்டுமே செல்லும் வகையில் இந்தச் சுரங்கப்பாதைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் இது எலி வளைச் சுரங்கம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலத்தடிப் பாதைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, இருந்தாலும் சுரங்கங்கள் இடிந்து விழும் போது அல்லது வெள்ளத்தில் மூழ்கும் போது அவை தொழிலாளர்களுக்கு ஒரு பொறிகளாகின்றன.
2014 ஆம் ஆண்டில், தேசியப் பசுமை தீர்ப்பாயம் (NGT) எலி வளைச் சுரங்கத்தைத் தடை செய்தது.