கஜகஸ்தானின் நூர்-சுல்தான் என்னுமிடத்தில் நடைபெற்ற எலோர்டா கோப்பைப் போட்டியில் இளையோர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்களான அல்ஃபியா பதான் மற்றும் கிதிகா ஆகியோர் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.
மேலும் இரு இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனைகளான கலைவாணி சீனிவாசன் மற்றும் ஜமுனா போரோ ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
இந்தப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான், கியூபா, சீனா மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டனர்.