இந்திய வெப்ப மண்டல வானிலையியல் நிறுவனமானது 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஏற்படவிருக்கும் எல்நினோ மோடோக்கி பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளது.
வெப்ப அலைகளின் நிகழ்வுகளை அதிக அளவில் ஏற்படுத்தும்
வெப்ப அலைகளின் (அனல் காற்று) காலங்களை அதிகப்படுத்தும்.
தென் இந்தியா மற்றும் கடலோரப் பகுதிகள் ஆகியவை அதிக அளவு வெப்ப அலையினால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றன.
இந்தியாவில் வெப்ப அலைகளானது பொதுவாக எல் நினோ நிகழ்வுகள் ஏற்பட்ட பின்பு நிகழ்கின்றது.
எல் நினோ என்பது கிழக்கு பசிபிக் பெருங்கடல் வெப்பமடைதல் ஆகும்.
ஆனால் எல் நினோ மோடோக்கி என்பது மத்திய பசிபிக் பெருங்கடல் வெப்பமடைதல் ஆகும்.
எல் நினோ மோடோக்கி நிகழ்வுகளுடன் இந்தியாவில் எதிர்காலத்தில் நிகழும் வெப்ப அலைகளுடன் தொடர்புடைய ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
வெப்ப அலைகள் மிக அதிக அளவில் நிகழ்வதற்குப் பின்வரும் கூடுதல் காரணிகள் காரணங்களாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
மண்ணின் ஈரப்பதம் குறைதல்
பூமியிலிருந்து வளிமண்டலத்திற்கு வெப்பம் கடத்தப்படுதல்.