2012 ஆம் ஆண்டு மியான்மரின் ஆங் சாங் சூகிக்குத் தான் வழங்கிய எல்லி வெய்ஸல் (Elie Wiesel Award) எனும் உயரிய விருதினை ரத்து செய்துள்ளதாக அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகம் (Holocaust Memorial Museum) அறிவித்துள்ளது.
நோபல் பரிசுபெற்ற மியான்மரின் தேசிய ஆலோசகரான ஆங்சான் சூகிக்கு வழங்கப்பட்ட இவ்விருது திரும்பப் பெறப்படுதலுக்கு மியான்மரில் ரோஹிங்கியா சமூகத்தினருக்கு எதிராக மியான்மர் இராணுவத்தார் நடத்திய இனப்படுகொலையை எதிர்த்து ஏதும் எதிர்வினை ஆற்றாமல் மவுனம் காத்தமையே காரணம் என இந்த அருங்காட்சியம் கூறியுள்ளது.
சிறுபான்மையினச் சமூகமான ரோஹிங்கியர்களுக்கு எதிராக மியான்மர் இராணுவம் நிகழ்த்திய அராஜகத்திலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள மியான்மரிலிருந்து 7,00,000 ரோஹிங்கியர்கள் இதுவரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.