TNPSC Thervupettagam

எல்லை சாலைகள் நிறுவனம் – கிழக்கு அருணாச்சலப்பிரதேசம்

December 14 , 2017 2539 days 1127 0
  • இந்தியாவின் எல்லை சாலைகள் நிறுவனம் (BRO – Border Road Organisation) கிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டி முடித்துள்ள இரு முக்கிய பாலங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இரு பாலங்களாவன
  • இன்ஜீபானி பாலம்
  • டியோபனி பாலம் (அ) எஜ் (EZE) பாலம்
  • இன்ஜீபானி பாலம் 140 மீட்டர் நீளமுடையது. அருணாச்சலத்தின் முக்கிய மாவட்டங்களான ரோயிங் மற்றும் டெஜீ ஆகியவற்றிற்கு தடையில்லா போக்குவரத்து சேவையை தரும் வகையில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
டியோபானி (EZE) பாலம்
  • 300 மீட்டர் நீளமுடைய நெடுங்கை பிடிமான பாலமான (Cantilever Bridge) இது அருணாச்சல பிரதேசத்தின் ரோயிங் பகுதியில் உள்ள EZE நதியில் கட்டப்பட்டுள்ளது.
  • டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் ஆண்டுதோறும் பருவமழை காலங்களின் போது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படும் நிலை தொடரும் நிலையில் இப்பாலம் அம்மக்களுக்கு பயன்தரக் கூடிய முக்கியமான உள்கட்டமைப்பு வசதியாகும்.
BRO – எல்லைகள் சாலைகள் நிறுவனம் (BRO – Border Road Organisation)
  • நாட்டின் எல்லைப் புறங்களில் அமைந்துள்ள அணுகிட இயலா, கரடுமுரடான பகுதிகளின் இணைப்புக்காக எல்லைகளில் சாலை அமைக்கும் நிறுவனமான எல்லை சாலைகள் நிறுவனம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • இந்திய ராணுவத்தின் பொறியாளர்கள் படை பிரிவினர், மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள்,ராணுவ சேவை படையினர்,ராணுவ காவல் படையினர் போன்றோர் எல்லை சாலை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
  • BRO அமைப்பானது 32,885 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளையும், மொத்தம் 12,200 மீட்டர்கள் நீளமுள்ள நிரந்தர பாலங்களையும் நிர்வகிக்கின்றது.
  • தற்போது நடப்பில், BRO தன் சாலை மேம்பாட்டு செயல்பாடுகளை 21 இந்திய மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் (அந்தமான் நிகோபார்), அண்டை நாடுகளான இலங்கை, ஆப்கானிஸ்தான், பூடான், மியான்மர் ஆகியவற்றிலும் மேற்கொண்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்