எல்லை சாலைகள் நிறுவனம் – கிழக்கு அருணாச்சலப்பிரதேசம்
December 14 , 2017 2539 days 1128 0
இந்தியாவின் எல்லை சாலைகள் நிறுவனம் (BRO – Border Road Organisation) கிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டி முடித்துள்ள இரு முக்கிய பாலங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இரு பாலங்களாவன
இன்ஜீபானி பாலம்
டியோபனி பாலம் (அ) எஜ் (EZE) பாலம்
இன்ஜீபானி பாலம் 140 மீட்டர் நீளமுடையது. அருணாச்சலத்தின் முக்கிய மாவட்டங்களான ரோயிங் மற்றும் டெஜீ ஆகியவற்றிற்கு தடையில்லா போக்குவரத்து சேவையை தரும் வகையில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
டியோபானி (EZE) பாலம்
300 மீட்டர் நீளமுடைய நெடுங்கை பிடிமான பாலமான (Cantilever Bridge) இது அருணாச்சல பிரதேசத்தின் ரோயிங் பகுதியில் உள்ள EZE நதியில் கட்டப்பட்டுள்ளது.
டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் ஆண்டுதோறும் பருவமழை காலங்களின் போது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படும் நிலை தொடரும் நிலையில் இப்பாலம் அம்மக்களுக்கு பயன்தரக் கூடிய முக்கியமான உள்கட்டமைப்பு வசதியாகும்.
BRO – எல்லைகள் சாலைகள் நிறுவனம் (BRO – Border Road Organisation)
நாட்டின் எல்லைப் புறங்களில் அமைந்துள்ள அணுகிட இயலா, கரடுமுரடான பகுதிகளின் இணைப்புக்காக எல்லைகளில் சாலை அமைக்கும் நிறுவனமான எல்லை சாலைகள் நிறுவனம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
இந்திய ராணுவத்தின் பொறியாளர்கள் படை பிரிவினர், மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள்,ராணுவ சேவை படையினர்,ராணுவ காவல் படையினர் போன்றோர் எல்லை சாலை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
BRO அமைப்பானது 32,885 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளையும், மொத்தம் 12,200 மீட்டர்கள் நீளமுள்ள நிரந்தர பாலங்களையும் நிர்வகிக்கின்றது.
தற்போது நடப்பில், BRO தன் சாலை மேம்பாட்டு செயல்பாடுகளை 21 இந்திய மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் (அந்தமான் நிகோபார்), அண்டை நாடுகளான இலங்கை, ஆப்கானிஸ்தான், பூடான், மியான்மர் ஆகியவற்றிலும் மேற்கொண்டு வருகின்றது.