மத்திய பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகமானது (Ministry of Corporate Affairs) நொடித்தல் மற்றும் திவால் குறியீட்டினை (Insolvency and Bankruptcy Code-IBC) வலுப்படுத்துவதற்காக, எல்லைத் தாண்டிய நொடித்தலின் மீது வரைவினை (Draft on cross-border insolvency) வெளியிட்டுள்ளது.
எல்லை தாண்டிய நொடித்தல் மீதான வரைவானது சர்வதேச வர்த்தகச் சட்டங்கள் மீதான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் (United Nations Commission on International Trade Laws- UNCITRAL) 1997-ஆம் ஆண்டின் எல்லைத் தாண்டிய நொடித்தல் மீதான மாதிரி சட்டத்தினை (Model Law on Cross-Border Insolvency) ஏற்றுக் கொள்வதற்கு வழிகோலுகின்றது.
நொடித்தல் மற்றும் திவால் குறியீட்டின்படி, நடப்பில் உள்ள 234 & 235 கூறுகளானது, இந்தியாவிற்கு வெளியே சொத்துகளையும், வணிக செயல்பாடுகளையும் கொண்டுள்ள, ஆனால் உள்நாட்டில் பெருநிறுவன கடனைக் கொண்டுள்ள திரும்பச் செலுத்தாத கடனாளிகள் விவகாரத்தை திறம்பட்ட முறையில் கையாள போதுமானதாக இல்லை.
இந்த வரைவின் கீழ், மத்திய அரசானது பிற நாடுகளுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, கடனைத் திரும்பச் செலுத்தாத உள்நாட்டுப் பெருநிறுவனக் கடனாளிகளின் (Default Domestic Corporate Debtor) வெளிநாட்டுச் சொத்துகளை இந்தியாவில் நொடித்தல் மற்றும் திவால் தீர்மானத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வரும்.