TNPSC Thervupettagam

எல்லை பாதுகாப்புப் படை – முதல் பெண் அதிகாரி

March 14 , 2018 2350 days 1369 0
  • மீண்டும் முதல் பெண் என்ற வரிசையில் எல்லைப் பாதுகாப்புப் படையான  இந்தோ-திபெத்   எல்லைக் காவல் படையில் நேரடி  முறையில்  போர்  பிரிவின் (combat officer)   முதல் பெண் அதிகாரியாக  25 வயதான பிரகிரிதி  நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 2016 ஆம் ஆண்டு பெண் அதிகாரிகளை போர் பிரிவில் நேரடியாக பணியமர்த்த அரசு அனுமதி அளித்ததை அடுத்து, மத்திய ஆயுதக் காவல் படையின் (Central Armed Police Force - CAPF) பல்வேறு  படைகளுள் பெண் அதிகாரிகளை நேரடியாக பணியமர்த்தும் கடைசிப் படை இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை   ஆகும்.
  • ஏற்கனவே இந்தோ-திபெத்  எல்லைக் காவல் படையில்  தாக்குதல் எதிர்ப்பு பணிகளில் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் கான்ஸ்டபிள் தகுதியில் மட்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  • இந்தோ-திபெத்  எல்லைக் காவல் படையானது  இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே 3488 கி.மீ. நீளமுள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control – LAC) பாதுகாக்கும் ஓர் மத்திய ஆயுதப்படையாகும்.
  • இந்தியாவின் மீதான சீன ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து 1962ல் இது  தோற்றுவிக்கப்பட்டது.
  • இதற்கு முன் நாட்டின் இரு ஆயுதப் படைகளான எல்லை பாதுகாப்புப் படை (BSF – Border Security Force) மற்றும் சாஸ்திர சீமாபால் (SSB – Sashastra Seema Bal) ஆகியவை முறையே 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் பெண் அதிகாரிகளை நேரடியாக பணியமர்த்த அனுமதி வழங்கியது.

இந்தோ-திபெத்   எல்லைக் காவல் படை

  • லடாக்கின் காரகோரம் கணவாயிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் ஜாசெப் லா வரையிலான 3488 கி.மீ நீளமுடைய இந்தோ-சீன சர்வதேச எல்லையை பாதுகாப்பதற்காக 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (Indo-Tibetan Border Police - ITBP) தோற்றுவிக்கப்பட்டது.
  • 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ-சீனப் போரின் விளைவாக மத்திய ரிசர்வ் காவல் படைச் சட்டத்தின் கீழ் 1962ல் அக்டோபர் 24ஆம் தேதி ஐந்து ஆயுதக் காவல் படைகளில் ஒன்றாக ITBP தோற்றுவிக்கப்பட்டது.
  • 1992ல் இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவல் படைச் சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு முழு தன்னாட்சி அதிகாரம் ITBPக்கு வழங்கப்பட்டது. இந்த காவல்படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

மத்திய ஆயுதக் காவல் படை

  • வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்ப்பதில் இந்திய ராணுவத்திற்கு உதவவும் முக்கியமாக உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை நிர்வகிக்கவும்  ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்புப்  படையே மத்திய ஆயுதக் காவல்படை  ஆகும்.
  • மத்திய உள்துறை அமைச்சகம் இப்படையை நிர்வகிக்கிறது.
  • மத்திய ஆயுதக்காவல் படையானது அஸ்ஸாம் ரைபில்ஸ் (Assam Rifles – AR), எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force - BSF), தேசிய பாதுகாப்புப் படை (National Security Guards – NSG), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force – CISF), மத்திய ரிசர்வ் காவல்படை (Central Reserve Police Force – CRPF), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை (Indo-Tibetan Border Police Force – ITBP), தேசிய பேரிடர் பதிலெதிர்ப்புப் படை (National Disaster Response Force – NDRF), சாஸ்திரா சீமாபால் (Sashastra Seema Bal – SSB) போன்ற பல்வேறு படைகளை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்