இண்டஸ்இந்த் என்ற வங்கியானது இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகத்துடன் கை கோர்த்துள்ளது.
தனது பணப் பரிமாற்ற வழங்கீட்டுப் பங்களிப்பு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகக் குறியீடு மூலமாக, இந்தியாவிற்கு நிகழ்நேரத்தில் பணம் அனுப்பும் வசதியை வழங்குவதற்கான ஒரு நடவடிக்கை இதுவாகும்.
எல்லைகளுக்கிடைப்பட்ட பண வழங்கீடுகளுக்காக/வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் பணம் அனுப்புதலுக்காக வேண்டி ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகத்தைப் பயன்படுத்த உள்ள முதல் இந்திய வங்கி இதுவாகும்.