TNPSC Thervupettagam

எல்லைக் கள ஆய்வுப் பணி

September 23 , 2018 2260 days 662 0
  • நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான எல்லை பணிக் குழுவின் (BWG - Boundary Working Group) ஐந்தாவது கூட்டம் காத்மாண்டுவில் நடைபெற்றது.
  • எல்லைக் கள ஆய்வுப் பணியில் அதிக தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய இரு நாடுகளும் இச்சந்திப்பின் போது ஒப்புக் கொண்டன.
  • மேலும் இரு நாடுகளும் மனிதர்கள் வாழாத நில ஆக்கிரமிப்புகள் மற்றும் எல்லை தாண்டிய அத்துமீறல்கள் ஆகியவற்றை தொடர்ந்து கணக்கிட ஒப்புக் கொண்டன.
  • BWG என்பது எல்லைக் கோட்டுப் பகுதிகளின் கட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள 2014 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளும் இணைந்து உருவாக்கிய அமைப்பாகும்.
  • BWG-ன் 4வது கூட்டம் உத்தரகண்ட்டின் (இந்தியா) டேராடூனில் நடைபெற்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்