2018-ஆம் ஆண்டு, மே மாதம் 7-ஆம் தேதி, எல்லைச் சாலைகள் நிறுவனம் (Border Roads Organisation - BRO) தனது 58-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
இந்த நிறுவனம் நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஏற்படுத்தும் முக்கியமான அரசு அமைப்பு ஆகும்.
இது ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது, இது 1960-ஆம் ஆண்டு, மே மாதம் 7-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
இந்த நிறுவனம் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தொலைதூரப் பகுதிகளில் யுக்தி சார்ந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்தி, மேம்படுத்தி மற்றும் பாதுகாத்திட உதவிடும் ஒரு முக்கிய நிறுவனமாகும்.
மேலும் இது நட்புறவு கொண்ட அண்டை நாடுகளிலும் சாலை வசதிகளை ஏற்படுத்தி பாதுகாத்திட உதவுகிறது.