TNPSC Thervupettagam

எளிதாக தொழிற் புரிவதற்கான குறியீடு 2018

November 1 , 2017 2612 days 890 0
  • உலக வங்கியால் வெளியிடப்படும் எளிதாக தொழில்புரிவதற்கான குறியீட்டின் 2018 ஆண்டிற்கான அறிக்கையின் படி, 190 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன் முறையாக 100-வது இடத்தை பிடித்துள்ளது.
  • சிறு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு, மின்சாரம், கடன் கிடைத்தல் உள்ளிட்ட பத்து காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குறியீடு மதிப்பிடப்படுகிறது.
  • இந்தியா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டிற்கான எளிதான தொழிற் புரிதல் குறியீட்டில்  30 இடங்கள் முன்னேறியுள்ளது.
  • எளிதாக தொழிற்புரிதற்கான குறியீடானது,  ஒரு வணிகத்தின் ஆண்டு சுழற்சியில் உள்ளடக்கப் பெறும் 10 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 190 நாடுகளின் தொழிற் சூழலை  ஆராய்ந்து உலக வங்கியால் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான எளிதாக தொழில் புரியும் குறியீட்டு அறிக்கையின் கீழ், மேம்பட்ட இடத்தைப் பிடித்த நாடுகளுள், பிரிக்ஸ் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் ஒரே நாடு இந்தியாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்