மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது (Ministry of Commerce and Industry) ஏற்றுமதியின் எளிமையாக்கலுக்காக (Ease Of Export) ஏற்றுமதி ஆய்வுக் குழுவின் டிஜிட்டல் தொடக்கங்களை துவங்கியுள்ளது.
வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றில் இந்தியாவின் ஏற்றுமதி ஆற்றலை ஊக்குவிப்பதற்காக டிஜிட்டல் இந்தியா தொடக்கத்தின் (Digital India Initiative) கீழ் இந்த டிஜிட்டல் தொடக்கங்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
டிஜிட்டல் தொடக்கங்களாவன
ஏற்றுமதி எச்சரிக்கை கண்காணிப்பு இணைய வாயில்
ஆய்வக மதிப்பீட்டு இணைய வாயில்
ஏற்றுமதி எச்சரிக்கை கண்காணிப்பு இணைய வாயிலானது (Export Alert Monitoring portal) இறக்குமதி செய்யும் நாடுகளால் எழுப்பப்படுகின்ற இணக்கமின்மையை (Non-compliances) கண்காணிக்கும்.
ஆய்வக மதிப்பீட்டு இணைய வாயிலானது (Lab-one assessment portal) மதிப்பீட்டு அமைப்புகள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற அனைத்து ஏற்றுமதி-சார் பங்கெடுப்பாளர்களுக்கும் அவர்களை பொதுவான ஒற்றை மேடையின் மீது திரட்டுவதன் மூலம் அவர்களுக்கு ஏற்றுமதி தொடர்பான ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையை (unified approach) வழங்கும்.
ஏற்றுமதிஆய்வுக்குழு
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஏற்றுமதி சான்றளிப்பு அமைப்பே (export certification body) ஏற்றுமதி ஆய்வுக் குழுவாகும். வெளிப்படையான முறையில் ஏற்றுமதி பரிமாற்ற நேரம் மற்றும் செலவைக் குறைக்க ஏற்றுமதி ஆய்வுக்குழு 3 இணைய வாயிலை மேம்படுத்தியுள்ளது.
1963 ஆம் ஆண்டின் ஏற்றுமதி (தரக்கட்டுப்பாடு மற்றும் ஆய்வு) (Export (Quality Control and Inspection) Act) சட்டத்தினுடையப் பிரிவு 3ன் கீழ் மத்திய அரசு ஏற்றுமதி ஆய்வுக் குழுவைத் தோற்றுவித்தது.
ஏற்றுமதி ஆய்வுக்குழு மத்திய அரசிற்கான ஓர் ஆலோசனை அமைப்பாகும் (advisory body) .
சென்னை, டெல்லி, கொச்சி, கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் மத்திய வர்த்தக அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள 5 ஏற்றுமதி ஆய்வு நிறுவனங்களின் (Export Inspection Agencies-EIAs) மீது தொழிற்நுட்ப மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஏற்றுமதி ஆய்வுக்குழு மேற்கொள்கின்றது.