அறிவியலாளர்கள் தற்போது CRISPR எனப்படும் மரபணு மாற்ற முறையினைப் பயன்படுத்தி, விரும்பத்தக்க மரபணு பண்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் அல்லது விரும்பத்தகாத பண்புகளை அகற்றுவதற்காக மரபணுக்களைத் துல்லியமாக திருத்தி அமைக்க முடியும்.
இருப்பினும், பொதுவாகப் பயன்படுத்தப் படும் CRISPR முறையின் வடிவமானது தாவர மரபணுக்களுக்கு பொருந்தாதது எனபது இதில் ஒரு முக்கியமான தடையாக உள்ளது.
இந்த அமைப்பானது டிஎன்ஏவின் மிகவும் சில குறிப்பிட்டப் பகுதிகளை இலக்காக நிர்ணயிப்பதற்காக Cas9 அல்லது Cas12 என்ற இரண்டு புரதங்களில் ஒன்றைப் பயன்படுத்துகிறது.
ஆனால் அவை தாவர செல்களுக்கு இடமளிக்க முடியாத அளவிற்குப் பெரிதானவை.
தாவர மரபணு மாற்றச் செயல்முறையில் உள்ள இந்தப் பெரிய சிக்கலைத் தீர்க்கக் கூடிய ஒரு மாற்றீட்டை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் முன் வைத்தனர்.
அவர்கள் டெய்னோகாக்கஸ் ரேடியோடூரன்ஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்பட்ட ISDra2TnpB என்ற ஒரு புரதத்தைக் கொண்ட தாவர மரபணு மாற்றக் கருவியினை உருவாக்கினர்.
ISDra2TnpB ஆனது Cas9 மற்றும் Cas12 ஆகிய புரதங்களின் அளவின் பாதி அளவை விட குறைவாக உள்ளது.