TNPSC Thervupettagam

எழுத்தறிவு மற்றும் முழு அளவிலான எழுத்தறிவு வரையறை

September 2 , 2024 41 days 123 0
  • 2022-23 ஆம் நிதியாண்டு முதல் 2026-27 ஆம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டு கால கட்டத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டம் (NILP) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்தத் திட்டம் ஆனது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 5.00 கோடி எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கல்வி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • இதற்காக, கல்வி அமைச்சகம் (MoE) ஆனது ‘எழுத்தறிவு’ மற்றும் ‘முழு அளவிலான எழுத்தறிவு’ அடைவதன் அர்த்தம் யாது என்பதை வரையறுத்துள்ளது.
  • கல்வியறிவு (எழுத்தறிவு) என்பது படிக்க, எழுத மற்றும் புரிந்து கொண்டு கணக்கிடும் திறன் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
  • இதில் எண்ணிம கல்வியறிவு, நிதியியல் கல்வியறிவு போன்ற முக்கியமான வாழ்க்கைத் திறன்களை அடையாளம் கண்டு, புரிந்து கொள்வது, விளக்குவது மற்றும் உருவாக்குவது ஆகியவை அடங்கும்.
  • முழு அளவிலான கல்வியறிவு என்பது 100% கல்வியறிவிற்குச் சமமானதாக கருதப்பட வேண்டும்.
  • மாநிலம்/ஒன்றியப் பிரதேசத்தில் 95% கல்வியறிவு நிலையினை அடைவது, முழு கல்வி அறிவிற்குச் சமமாக கருதப்படலாம்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 25.76 கோடி பேர் எழுத்தறிவு இல்லாத நபர்களாக உள்ளதை அடுத்து, இந்தியா குறிப்பிடத்தக்க எழுத்தறிவு சவாலை எதிர்கொள்கிறது.
  • இதில் 9.08 கோடி ஆண்களும் 16.68 கோடி பெண்களும் அடங்குவர்.
  • சாக்சார் பாரத் திட்டம் ஆனது 2009-10 மற்றும் 2017-18 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 7.64 கோடி நபர்களைக் கல்வியறிவு பெற்றவர்கள் என சான்றளித்துள்ளது.
  • இந்தியாவில் மேலும் ஏறத்தாழ சுமார் 18.12 கோடி இளம் பருவத்தினர் கல்வியறிவு இல்லாதவர்களாகவே உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்