2022-23 ஆம் நிதியாண்டு முதல் 2026-27 ஆம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டு கால கட்டத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டம் (NILP) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் ஆனது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 5.00 கோடி எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கல்வி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
இதற்காக, கல்வி அமைச்சகம் (MoE) ஆனது ‘எழுத்தறிவு’ மற்றும் ‘முழு அளவிலான எழுத்தறிவு’ அடைவதன் அர்த்தம் யாது என்பதை வரையறுத்துள்ளது.
கல்வியறிவு (எழுத்தறிவு) என்பது படிக்க, எழுத மற்றும் புரிந்து கொண்டு கணக்கிடும் திறன் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இதில் எண்ணிம கல்வியறிவு, நிதியியல் கல்வியறிவு போன்ற முக்கியமான வாழ்க்கைத் திறன்களை அடையாளம் கண்டு, புரிந்து கொள்வது, விளக்குவது மற்றும் உருவாக்குவது ஆகியவை அடங்கும்.
முழு அளவிலான கல்வியறிவு என்பது 100% கல்வியறிவிற்குச் சமமானதாக கருதப்பட வேண்டும்.
மாநிலம்/ஒன்றியப் பிரதேசத்தில் 95% கல்வியறிவு நிலையினை அடைவது, முழு கல்வி அறிவிற்குச் சமமாக கருதப்படலாம்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 25.76 கோடி பேர் எழுத்தறிவு இல்லாத நபர்களாக உள்ளதை அடுத்து, இந்தியா குறிப்பிடத்தக்க எழுத்தறிவு சவாலை எதிர்கொள்கிறது.
இதில் 9.08 கோடி ஆண்களும் 16.68 கோடி பெண்களும் அடங்குவர்.
சாக்சார் பாரத் திட்டம் ஆனது 2009-10 மற்றும் 2017-18 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 7.64 கோடி நபர்களைக் கல்வியறிவு பெற்றவர்கள் என சான்றளித்துள்ளது.
இந்தியாவில் மேலும் ஏறத்தாழ சுமார் 18.12 கோடி இளம் பருவத்தினர் கல்வியறிவு இல்லாதவர்களாகவே உள்ளனர்.