TNPSC Thervupettagam

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

October 31 , 2017 2614 days 962 0
  • சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான புகழ்பெற்ற மேலாண்மை பொன்னுசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
  • விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்த இவர்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை  இணைத்துக்கொண்டு பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.
  • "உயிர் நிலம்' உள்ளிட்ட 6 நாவல்கள், 22 சிறுகதை தொகுப்புகள், 6 குறுநாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு என 35 நூல்களை எழுதியுள்ளார். "மின்சாரப் பூ' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
  • இலக்கிய சிந்தனை விருது, ஆதித்தனார் விருது மற்றும் தமிழக அரசின் விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்