TNPSC Thervupettagam

எழுத்தாளர்களுக்கு சிங்காரவேலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

July 20 , 2017 2727 days 1479 0
  • தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக சிறந்த எழுத்தாளருக்கு ஆண்டு தோறும் சிங்காரவேலர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுவோருக்கும், சமுதாய முன்னேற்றத்திற்காவும், சமத்துவக் கொள்கைகளுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுவோர்களில் சிறந்த ஒருவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இவ்விருது வழங்கப்படும். விருதுத் தொகையாக ஒரு லட்சமும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும் பரிசாக வழங்கப்படும்.
  • சிங்காரவேலர் குறிப்பு
  • ம. சிங்காரவேலர் (பிப்ரவரி 18, 1860 - பிப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடைமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
  • மலையபுரம் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர், பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" எனப் போற்றப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்