53 வயதான, முன்னாள் அழகி மற்றும் தொழிற்முனைவோரான, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா பாகல் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய வயதான இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
1985ம் ஆண்டில் நடந்த மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முன்னாள் அழகியான சங்கீதா சிந்தி பாகல் தற்சமயம் குர்கானில் வசித்து வருகிறார்.
அவரது கணவர் அங்குர் பாகல் 2016ம் ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறினார்.
சங்கீதா பாகல் ஏற்கெனவே உலகத்தின் உயரமான ஏழு சிகரங்களில் ஆறின் மீது ஏறி வெற்றி கண்டுள்ளார்.
அவர் 2011ம் ஆண்டு மே மாதம் 48 வயதாகும் போது ஏறிய பிரேமலதா அகர்வால் என்ற பெண்ணின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதிகாரிகளைப் பொறுத்த மட்டில் இந்த ஆண்டில் மட்டும் ஆறு டஜன் இந்தியர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது மலையேறியுள்ளனர். இந்த வகையில் அமெரிக்காவில் மலையேறுபவர்களின் எண்ணிக்கைக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
நேபாள பகுதியிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய வகையில் இந்தியாவின் இளவயதுப் பெண்ணாக அரியானாவைச் சேர்ந்த 16 வயதுப் பெண் சிவாங்கி பதக் உருவெடுத்துள்ளார்.