TNPSC Thervupettagam

எஸ்எம்எஸ் மூலம் தகவல் இணையச் சேவை – பிஸ்என்எல்

January 27 , 2019 2002 days 571 0
  • இணைய வசதியற்ற அல்லது அலைவரிசை துண்டிப்பு ஏற்படும் பகுதிகளில் குறுந்தகவல்கள் மூலம் தகவல் இணையச் சேவையை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் பிரெஞ்சின் பி-பவுண்ட் என்ற நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த தொழில்நுட்பம் முதன்முறையாக பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது பல ஆப்பிரிக்க நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
  • குறுந்தகவல் வழி தகவல் இணையச் சேவையானது கைபேசியில் பொருத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படவிருக்கிறது.
  • இந்த செயலியானது பயனாளியின் பகுதியில் மோசமான அலைவரிசை இணைப்பு இருப்பின் அதனைக் கண்டறியும். அவ்வாறு இருப்பின் இச்செயலியானது பி-பவுண்ட் சர்வருக்கு சமிக்ஞையை அனுப்பும்.
  • இச்செயலியின் மூலம் பெறப்பட்ட சமிக்ஞையையடுத்து பி-பவுண்ட் சர்வர் குறுந்தகவல் வழி இணையச் சேவை இணைப்பு வசதியை ஏற்படுத்தும்.
  • செயலி மற்றும் சர்வர் ஆகியவற்றிற்கிடையே குறுந்தகவல் பரிமாற்றத்தின் மூலம் இந்த இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்