TNPSC Thervupettagam

எஸ்சிகிபோ பகுதி

December 11 , 2023 222 days 218 0
  • அண்டை நாடான கயானாவின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளம் நிறைந்த பகுதியான எஸ்சிகிபோவை கைப்பற்ற வெனிசுலா அரசு திட்டமிட்டுள்ளது.
  • 95 சதவீதத்திற்கும் அதிகமான வெனிசுலா நாட்டு வாக்காளர்கள், எஸ்சிகிபோ மீது உரிமை கோரும் பொது வாக்கெடுப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
  • எஸ்சிகிபோ கயானாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்துள்ள நிலையில், அதற்கு முன் - ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அது பிரிட்டிஷ் கயானாவாக இருந்தது, ஆனால் வெனிசுலா நீண்ட காலமாக அதைக் கட்டுப்படுத்த முயல்கிறது.
  • வெனிசுலா நாடானது, அந்தப் பிராந்தியத்தின் கிழக்கே உள்ள எஸ்சிகிபோ நதி தனது நாட்டுடன் இயற்கையான எல்லையை உருவாக்குகிறது என்று கூறுகிறது.
  • இப்பகுதியில் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது.
  • மதிப்பிடப்பட்ட இருப்பின் அளவானது குறைந்தது 10 பில்லியன் பீப்பாய்கள் அதாவது  குவைத் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அளவை விட அதிகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்