இந்திய பாரத ஸ்டேட் வங்கியின் ஷாங்காய் கிளையானது தற்பொழுது சீனாவின் தேசிய மேம்பட்ட பணவழங்கீட்டு அமைப்புடன் (China’s National Advance Payment System - CNAPS) இணைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு நாணயத்தில் வணிகம் செய்வதற்கு உரிமத்தைப் பெற்ற ஒரே இந்திய வங்கி பாரத ஸ்டேட் வங்கியாகும். மேலும் சீனாவின் மக்கள் வங்கியினால் CNAPSற்குள் இணைக்கப்பட்ட முதல் வங்கி இதுவாகும்.
CNAPS ஆனது அனைத்து பணவழங்கீடுகளுக்கும் நிகழ்நேர தீர்வுச் சேவைகளை அளிப்பதற்காக சீனாவின் மக்கள் வங்கியினால் 2008 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.