இந்தியா மற்றும் மாலத்தீவுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளின் (MNDF) கடலோரக் காவல்படைத் துறைமுகமான ‘ஏகதா துறைமுகத்திற்கு’ அடிக்கல் நாட்டினர்.
சிஃபவாருவில் அமைக்கப்பட உள்ள கடலோரக் காவல்படை துறைமுகம் மற்றும் பழுது பார்க்கும் மையத்தின் உருவாக்கமானது இந்தியாவின் மிகப்பெரிய மானிய உதவித் திட்டங்களில் ஒன்றாகும்.
1988 ஆம் ஆண்டில், இலங்கைப் போராளி அமைப்பு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மாலத்தீவு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்க இந்தியா உதவியது.
2020 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு டோர்னியர் விமானத்தை மாலத்தீவு அரசிற்குப் பரிசாக வழங்கியது மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஒரு ரோந்துக் கப்பலை வழங்கியது.