மத்திய அரசானது, 2019 ஆம் ஆண்டில், ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் (EMRS) சேர்க்கையில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுவினர்களுக்கு (PVTG) 5% உள் ஒதுக்கீட்டினை அறிமுகப்படுத்தியது.
PVTG சமூகங்களைச் சேர்ந்த அனைத்து EMRS பள்ளி மாணவர்களில் வெறும் 3.4% பேர் மட்டுமே உள்ள பள்ளிகள் இந்த ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்ய சிரமப்படுகின்றன என்று சமீபத்தியத் தரவு காட்டுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் அனைத்துச் செயல்பாட்டில் உள்ள 407 EMRSகளைச் சேர்ந்த 1,30,101 மாணவர்களில் 4,480 பேர் PVTG சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்கள் 5% PVTG மாணவர் இட ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்யப் போராடுகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில், PVTG மாணவர்கள் மொத்த மாணவர்களில் சுமார் 3.8% ஆகவும், சத்தீஸ்கரில் 2.74% பேர் PVTG மாணவர்களாகவும் உள்ளனர்.
குஜராத்தில், மொத்தமுள்ள 10,688 மாணவர்களில் வெறும் 21 மாணவர்களே இந்த PVTG சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டின் EMRS பள்ளிகளில், மொத்த மாணவர்களில் 8.36% பேர் PVTG குழுவினைச் சேர்ந்தவர்கள் ஆவர்; ஜார்க்கண்ட் மாநிலத்தில், இந்த சதவீதம் 7.48% ஆகவும் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இது 12.91% ஆகவும் உள்ளது.
சமீபத்திய மதிப்பீட்டின்படி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகியவை மிகவும் அதிக எண்ணிக்கையிலான PVTG குழுக்களைக் கொண்ட மாநிலங்களாகும்.