TNPSC Thervupettagam

ஏக்லவ்யா பள்ளிகளில் PVTG உள் ஒதுக்கீடு

December 27 , 2024 63 days 92 0
  • மத்திய அரசானது, 2019 ஆம் ஆண்டில், ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் (EMRS) சேர்க்கையில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுவினர்களுக்கு (PVTG) 5% உள் ஒதுக்கீட்டினை அறிமுகப்படுத்தியது.
  • PVTG சமூகங்களைச் சேர்ந்த அனைத்து EMRS பள்ளி மாணவர்களில் வெறும் 3.4% பேர் மட்டுமே உள்ள பள்ளிகள் இந்த ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்ய சிரமப்படுகின்றன என்று சமீபத்தியத் தரவு காட்டுகிறது.
  • இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் அனைத்துச் செயல்பாட்டில் உள்ள 407 EMRSகளைச் சேர்ந்த 1,30,101 மாணவர்களில் 4,480 பேர் PVTG சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
  • மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்கள் 5% PVTG மாணவர் இட ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்யப் போராடுகின்றன.
  • மத்தியப் பிரதேச மாநிலத்தில், PVTG மாணவர்கள் மொத்த மாணவர்களில் சுமார் 3.8% ஆகவும், சத்தீஸ்கரில் 2.74% பேர் PVTG மாணவர்களாகவும் உள்ளனர்.
  • குஜராத்தில், மொத்தமுள்ள 10,688 மாணவர்களில் வெறும் 21 மாணவர்களே இந்த PVTG சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
  • தமிழ்நாட்டின் EMRS பள்ளிகளில், மொத்த மாணவர்களில் 8.36% பேர் PVTG குழுவினைச் சேர்ந்தவர்கள் ஆவர்; ஜார்க்கண்ட் மாநிலத்தில், இந்த சதவீதம் 7.48% ஆகவும் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இது 12.91% ஆகவும் உள்ளது.
  • சமீபத்திய மதிப்பீட்டின்படி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகியவை மிகவும் அதிக எண்ணிக்கையிலான PVTG குழுக்களைக் கொண்ட மாநிலங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்