ஜெர்மனியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா மெர்க்கெல்லை நான்காவது முறையாகவும் அநேகமாக இறுதி தடவையாகவும் ஜெர்மனியின் அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
பண்டேஸ்டாகில் பெரும்பான்மை ஓட்டுக்கள் கிறித்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சித் தலைவருக்கு கிடைத்திருப்பது அவரது நான்காவது பதவிக்காலத்தை ஆரம்பிக்க உதவுகிறது.
ஜெர்மன் மொழியில் வேடிக்கையாக குரோகோ என்று கூறப்படும் மிகப்பெரிய கூட்டணியை சமூக ஜனநாயகக் கட்சியோடு சேர்ந்து கட்டமைப்பதில் பேச்சுவார்த்தைகள் உச்சகட்ட நிலையில் இருந்த சமயத்தைத் தொடர்ந்து வந்த ஜெர்மனியின் அரசியல் சூழ்நிலையில் அவர் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
ரகசிய வாக்கெடுப்பு முறையில் – பண்டேஸ்டாகின் 709 உறுப்பினர்களில் 364 உறுப்பினர்கள், அதாவது தேவைப்படும் 50 சதவீதத்தை விட 9 சதவிகிதம் கூடுதலாக அவருக்கு சாதகமாக வாக்கு செலுத்தியுள்ளனர்.
பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு முன்பாக ஜெர்மனியின் தலைவர் பிராங்க்-வால்டர் ஸ்டெயின்மீயர் மூலம் முறையாக மெர்க்கல் அதிபராக நியமிக்கப்படுவார்.