பட்டியலிடப்படாத புத்தொழில் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கிய பங்குகளை மதிப்பிடுவதற்கான வழிமுறையை உள்ளடக்கிய புதிய ஏஞ்சல் வரி (புத்தொழில் நிறுவனங்களின் மிகை மதிப்பு மீதான வரி) விதிகளை வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
கட்டாயமாக மாற்றக் கூடிய முன்னுரிமைப் பங்குகளை (CCPS) குறிக்கும் கூடுதல் துணைப் பிரிவை இந்த அறிவிப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு பட்டியலிடப்படாத நிறுவனம் ஆனது அதன் நியாயமான சந்தை மதிப்பை (FMV) விட அதிக விலையில் முதலீட்டாளருக்கு பங்குகளை வழங்கும்போது ஏஞ்சல் வரி (30.6 சதவீதம்) விதிக்கப்படுகிறது.
முன்னதாக, இது ஒரு உள்நாட்டு முதலீட்டாளரால் செய்யப்படும் முதலீடுகளுக்கு மட்டுமே விதிக்கப் பட்டது.
ஆனால் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் மீதும் ஏஞ்சல் வரியை விதிப்பதற்கு விரிவுபடுத்த முன்மொழியப் பட்டது.