TNPSC Thervupettagam

ஏமனில் போர் நிறுத்தம்

April 12 , 2020 1596 days 566 0
  • சவுதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பானது ஏமனில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
  • ஏமனில் இந்தக் கூட்டமைப்பின் தலையீடானது ஐக்கிய நாடுகள் பட்டயச் சட்டத்தின் சரத்து 2 உடன் ஒன்றிப் பொருந்துவதாக உள்ளது.
  • ஏமனில் இந்தக் கூட்டமைப்பின் தலையீடானது “வலிமையான புயல் நடவடிக்கை” (Operation Decisive Storm) என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்தக் கூட்டமைப்பில் சவுதி அரேபியா, சூடான், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், குவைத், எகிப்து, ஜோர்டான், மொராக்கோ, செனகல் ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தக் கூட்டமைப்பானது அமெரிக்காவினால் ஆதரிக்கப் படுகின்றது.
  • 2015 ஆம் ஆண்டில் தொடங்கிய ஒரு பிரச்சினையினால் ஏமனானது சூறையாடப் பட்டது.
  • ஈரான் நாட்டு இராணுவத்தினால் ஆதரிக்கப்பட்ட ஹவ்திஸ் படைப் பிரிவானது ஏமன் நாட்டின் மேற்கு பகுதியில் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டது.
  • ஹவ்திஸ் தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையானது ஏமன் நாட்டின் அதிபரான மன்சூர் ஹாடி என்பவரை அந்நாட்டை விட்டு வெளியேறச் செய்தது. 
  • இந்தக் குழுவின் எழுச்சியைத் தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் 8 இதர அரபு நாடுகள் ஹாடியின் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் ஏற்படுத்த ராணுவ நடவடிக்கையில் இறங்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்