அரசின் தலைவருக்கான ஆகாய விமானமான இரண்டு போயிங்-777 விமானத்திற்கு இரண்டு மேம்படுத்தப்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை விற்பதற்கு அமெரிக்கா ஒத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த இரண்டு ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மிகப்பெரிய அகச்சிவப்பு எதிர்ப்பு முறைகள் கொண்ட விமானம் (Large Aircraft Infrared Countermeasures - LAIRCAM) மற்றும் சுய பாதுகாப்பு கொண்ட தொகுப்புகள் என்பதாகும்.
LAIRCM என்பது மனிதனால் தூக்கி ஏவக்கூடிய ஏவுகணைகளிலிருந்து மிகப்பெரிய விமானத்தைப் பாதுகாக்கும்.
LAIRCM அமைப்பு விமான இயக்குக் குழுவின் எச்சரிக்கைக்கான நேரத்தை அதிகரிக்கும், தவறான எச்சரிக்கை மணி விகிதங்களை குறைக்கும் மற்றும் தானாகவே மேம்படுத்தப்பட்ட இடைநிலை வரம்பு ஏவுகணை அமைப்புகளை எதிர்க்கும்.
இது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய தலைவர்கள் பயணம் மேற்கொள்ளும் விமானங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும்.