ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் (UNEP) ‘Adaptation Gap Report 2024: Come hell and high water’ என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வளர்ந்து வரும் நாடுகளுக்கான சர்வதேசப் பொது ஏற்பு நிதி வழங்கல் ஆனது 2022 ஆம் ஆண்டில் 28 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.
இருப்பினும், கிளாஸ்கோ பருவநிலை ஒப்பந்த இலக்கை அடைவது என்பது ஏற்பு நிதி இடைவெளியை மட்டுமே குறைக்கும் என்ற நிலையில் இது ஆண்டிற்கு சுமார் 187-359 பில்லியன் டாலர் (சுமார் 5 சதவீதம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு வரை வளர்ந்து வரும் நாடுகளுக்கான உண்மையான ஏற்பு நிதித் தேவைகள் ஆண்டிற்கு 387 பில்லியன் டாலர் ஆகும்.
இந்தத் திட்டமிடலில் சுமார் 171 நாடுகளானது பாரீஸ் உடன்படிக்கையினை அடையச் செய்வதற்கான கொள்கை அல்லது உத்திசார் ஆவணம் போன்ற குறைந்தபட்சம் ஒரு தேசிய ஏற்புத் திட்டமிடல் செயற்கருவியினைக் கொண்டுள்ளன.
அத்தகைய செயற்கருவி இல்லாத 26 நாடுகளில், 10 நாடுகள் ஆனது அத்தகைய செயல் திட்டங்களை உருவாக்குவதற்கான விருப்பத்தினைக் கூட வெளிப்படுத்தவில்லை.