பொது பலதரப்பு மற்றும் இருதரப்பு நிதி மூலங்களிலிருந்து வழங்கப்படும் பருவநிலை ஏற்பு நிதி வழங்கீடுகள் ஆனது, 2021 ஆம் ஆண்டில் 15 சதவீதம் அளவு குறைந்து சுமார் 21 பில்லியன் டாலராக உள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளின் நிதித் தேவைகள் தற்போது சர்வதேசப் பொது நிதி வழங்கீட்டினை விட 10 முதல்18 மடங்கு அதிகமாக உள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆகும் மொத்த ஏற்புச் செலவினமானது ஆண்டிற்கு 215 பில்லியன் டாலர் ஆகும்.
குறைவான மேம்பாட்டு நிலை கொண்ட நாடுகள் மற்றும் சிறிய தீவுகள் கொண்ட வளர்ந்த நாடுகளுக்கான மாதிரி ஏற்புச் செலவினங்கள் முறையே ஆண்டிற்கு 25 பில்லியன் டாலர் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம்) மற்றும் ஆண்டிற்கு 4.7 பில்லியன் டாலர் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதம்) என மதிப்பிடப் பட்டு உள்ளது.