TNPSC Thervupettagam

ஏற்றுமதிப் பொருட்கள் மீதான வரிகளை நீக்கும் திட்டம்

March 16 , 2020 1718 days 534 0
  • இந்தியாவில் இருந்து சரக்கு ஏற்றுமதித் திட்டத்தை படிப்படியாகத் திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது ஏற்றுமதி பொருட்கள் மீதான வரிகளை நீக்கும் திட்டத்தினால் பின்னர் மாற்றப் படும்.
  • கொரோனா வைரஸின் திடீர்ப் பெருக்கத்தினால் ஏற்றுமதிகள் மேலும் வீழ்ச்சியடையும் என்பதால் இச்சரக்கு ஏற்றுமதி திட்டமானது மாற்றப் படுகிறது.
  • ஏற்றுமதிப் பொருட்கள் மீதான வரிகளை நீக்கும் திட்டமானது உலக வர்த்தக அமைப்பு விதிமுறைகளுக்கு இணங்குகிறது.
  • ஏற்றுமதிப் பொருட்கள் மீதான வரிகளை நீக்கும் திட்டமானது ஏற்றுமதியாளர்கள் தாங்கள் செலுத்திய வரிப் பணத்தை  திருப்பிப் பெருவதற்கான ஒரு திட்டமாகும்.
  • இந்தியாவில் இருந்து சரக்கு ஏற்றுமதித் திட்டம் ஆனது 2% முதல் 5% வரை ஏற்றுமதி சலுகைகளை வழங்குகிறது.
  • இது இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் (FTP 2015-20) கீழ் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் திட்டத்தின் நோக்கம் உலகளாவியத் தயாரிப்புகளோடு  இந்தியத் தயாரிப்புகளைப் போட்டியிடச் செய்வது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்